நீரிழிவு நோயை உண்டாக்கும் வெண்ணை

Last Modified : 22 Feb, 2017 05:54 pm
இந்தியாவில் உணவின் சுவையை கூட்டுவதற்காக உணவு பதார்த்தங்களில் வெண்ணையை சேர்ப்பது வழக்கம். வெண்ணையை அதிக அளவில் உட்கொள்வதால் நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்கள், தினம் தோறும் 12 கிராம் அளவிற்கு வெண்ணை உண்பவர்கள் டைப்-2 நீரிழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோய் மட்டுமல்லாது இதய நோய்களையும் இது உண்டாக்கும். வெண்ணையில் 51% செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணையில் தான் இந்த அளவிற்கு தீங்கு தரும் கொழுப்புகள் இருப்பதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், வீடுகளில் தயாரிக்கும் வெண்ணையை அளவோடு சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் வராது, எனவும் கூறியுள்ளனர். வெண்ணையோடு அதிக அளவு காய்கறிகளை உண்ணவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close