குழந்தைகளின் குளியலில் அக்கறை காட்டுபவரா நீங்கள்..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

குழந்தைகளின் உணவில் எந்த அளவு அக்கறை காட்டுகின்றோமோ, அதே அளவு அவர்களின் குளியல் விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா காலங்களில் இருந்த நாட்டு வைத்திய முறை இன்று பல பெண்களுக்கு தெரிவதில்லை. "செவி வழி வைத்தியம்" என்று சொல்லப்படும் இந்த முறை இன்று எவராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை. இன்று குழந்தைகளை குளிக்க வைக்கும்போது "பேபி சோப், பேபி ஷாம்பூ" என பல கெமிக்கல்களை அந்தப் பிஞ்சு தேகத்தில் தடவி, அவர்களின் ஆரோக்கியத்தை நாமே சீரழித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது தான் கசப்பான உண்மை. சரி, இதற்கு மாற்று வழிதான் என்ன..? நம் பாட்டி காலத்து "மருந்து குளியல்" மட்டுமே ஒரே தீர்வு. அதற்கு தேவையான பொருட்கள்... கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் ரோஜா இதழ் - 25 கிராம் சந்தனக்கட்டை - 50 கிராம் செஞ்சந்தனம் - 50 கிராம் பாசிப்பயறு - 200 கிராம் ஆவாரம் பூ இதழ், எலுமிச்சை இலைக்கொழுந்து - 25 கிராம் வேப்பிலைக் கொழுந்து - 25 கிராம் இவற்றை வெயிலில் நன்கு காயவைத்து அரைக்கவும். அரைத்த பொடியை வெள்ளை பருத்தி துணியில் சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும். தினமும் குழந்தையைக் குளிப்பாட்டும்போது, இந்தப் பொடியில் சிறிது எடுத்து, குழந்தையின் கண், காது தவிர மற்ற இடங்களில் குளியல் பொடியை நன்கு தடவி குளிப்பாட்டவும். ஆண் குழந்தைகளுக்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம். அவர்களுக்கான பொடி தயாரிப்பில், கஸ்தூரி மஞ்சளின் அளவை 25 கிராமாக குறைத்துக்கொள்ளலாம். மூன்று வயதுக்கு மேலான பெண் குழந்தைகள், இளம் பெண்கள், இல்லத்தரசிகள் என இந்தப் பொடியை எந்த வயதுப் பெண்களும் தொடர்ந்து பயன்படுத்தி வர, சருமம் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close