'பீர் - யோகா' தெரியுமா ??

Last Modified : 22 Feb, 2017 07:04 pm
டைட்டில பார்த்ததும் அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா!! பின்ன என்னங்க, உடம்ப குறைக்க, மனச ஒருநிலைப் படுத்த யோகா செய்வாங்கனு எல்லாருக்குமே தெரியும். ஆனா இது என்ன புதுசா பீர் யோகானு யோசிக்குறீங்களா ?? இது தாங்க யோகால லேட்டஸ்ட் ட்ரெண்ட். பீர் யோகா என்பது பீர் பாட்டிலை தலையில வெச்சிட்டு செய்யுறது. இப்படி பீர் பாட்டிலை தலையில் வெச்சிட்டு யோகா செய்யும் போது, கொஞ்சம் பீரைக் குடிக்கணும் இது உடம்ப மட்டும் இல்லைங்க மனசையும் ரிலாக்ஸ் ஆக்கிடும். யோகா செய்ய ஏன் பீர்? பீரின் நன்மைகளைப் பற்றி நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். பீரில் என்ன தான் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயில் இருந்து உடலைப் பாதுகாக்கும். பீர் யோகா செய்வது எப்படி? முதலில் சிறிது பீரைக் குடித்து விட்டு, பின் யோகாசனங்களை அந்த பாட்டில் கொண்டு செய்ய வேண்டும். இப்படி குடித்துக் கொண்டு யோகா பயிற்சி செய்வது வேடிக்கையாக இருப்பதோடு, ஒருமுறையாவது இதை முயற்சிக்க வேண்டுமென்ற எண்ணத்தை வரவழைக்கும். யாரெல்லாம் பீர் யோகாவை செய்யலாம்? பீர் யோகாவை பீர் பிரியர்கள் மற்றும் யோகா பிரியர்கள் என்று யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதை செய்ய சரியான வயது மிகவும் முக்கியம். சிறு வயதினர் இந்த யோகாவை செய்ய கூடாது. யோகா நிலையத்தில் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு எளிய வழி. இந்த யோகாவில் பயன்படுத்தப்படும் ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டில், ஒருவரது மனதை ஒருநிலைப்படுத்தும் திறனை அதிகரிக்குமாம். ஓ.கே. போங்க எல்லாரும் போய் பீர் யோகால ஜாயின் பண்ணுங்க....!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close