ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணாதவங்க இத படியுங்க ப்ளீஸ் !!!

  gobinath   | Last Modified : 24 Feb, 2017 12:16 pm
எவ்வாறான உணவை உண்ண வேண்டும், தாங்கள் உண்ணும் உணவில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதில் இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறைவாக இருந்தாலும், அது, ஆரோக்கியமானதாக இருக்கிறதா? அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதா என்பதை பார்த்து பார்த்து சாப்பிட நம் மக்கள் பழகி கொண்டார்கள். பொதுவாக, இந்தியர்களாகிய நாம், உப்பு, சர்க்கரை, பால் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் மிக அதிகளவில் பயன்படுத்துகின்றோம். அதிலும், எண்ணெய், சொல்லவே வேண்டாம். நாம் பயன்படுத்தும் எண்ணெய் தான், நம் உடலில் உண்டாகும் அதிக கொழுப்புக்கு காரணமாக அமைகிறது என்பதால், நாம் எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியது கடமை. பண்டைய கிரேக்க வரலாற்றில், "திரவ தங்கம்" என்று அழைக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய், நம் உடலில் சேகரிக்கப்படும் கொழுப்பின் அளவை அதிகளவில் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக நாம் எண்ணெய் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது, உண்டாகும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை, பசையம் (gluten ) மற்றும் டிரான்ஸ் பாட் (trans fat) ஆகியவை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் போது தடுக்கப்படுகிறது. இது மட்டும் அல்லாது, நம் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது. ஆலிப் எண்ணையில் உள்ள நிரம்பாத கொழுப்புகள் ரத்தக் குழாய்களை அடைக்கும் பொருட்களின் அளவை குறைப்பதால், இதய நோய்கள் வருவது குறைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, இதில் உள்ள ஒமேகா - 3, வைட்டமின்கள் , தாதுப்பொருட்கள், கண், தோல், எலும்பு மற்றும் செல்களுக்கு உகந்தவையாக உள்ளன. பண்டைய காலத்தில், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்ததாக சில வரலாற்று குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது. எனவே, எண்ணெய் வாங்கும் போது, அது ஆலிவ் எண்ணெய்யா? என பார்த்து வாங்குங்கள்..ஆரோக்கியமாக வாழுங்கள்.....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close