ஆணோ, அல்லது பெண்ணோ, அது யாராக இருந்தாலும், ஒருவருக்கு சுரக்கும் வியர்வையின் அளவானது, அவர்களின் உடல் பருமனுக்கு ஏற்றவாறு மாறுபடும் என ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதன்படி, உடல் பருமன் குறைவாக இருப்பவருக்கு வெளியேறும் வியர்வையின் அளவானது, உடல் பருமன் அதிகளவில் இருப்பவருக்கு சுரக்கும் வியர்வையின் அளவை விட குறைவாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உடலானது பொதுவாக 2 வகைகளில் தன்னை குளிர்படுத்திக் கொள்ளும். 1. வியர்வை. 2. சருமத்தின் மேற்பரப்பில் சுழற்சி அதிகரித்து அதன் மூலம் உடல் சூடு தணிக்கப்படும். மேற்குறிப்பிடப்பட்ட இரண்டுமே, உடல் பருமன் மற்றும் வடிவம் பொறுத்தே செயல்படும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது பாலின அடிப்படையில் வேறுபடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் உடல் பருமனுக்கு ஏற்பதான் வியர்வை வெளியேறும் என தெரிவித்துள்ளது.