உங்க மூளைக்கான ரீ ஃப்ரெஷ் பட்டன் இதுதான்...!!!

  jerome   | Last Modified : 24 Feb, 2017 08:40 pm
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3. புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்த பயிற்சிக்கான எளிய டிப்ஸ்கள் கீழே... ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2, 4, 6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக 100, 98, 96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம். புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். இந்த விளம்பரம் வேறு எந்த மாதிரி இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்க்கும். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும் ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய், வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close