மஞ்சள் + மிளகு இந்த கூட்டணியின் நன்மைகள் தெரியுமா..?

  jerome   | Last Modified : 24 Feb, 2017 09:23 pm
பாட்டி காலத்திலிருந்து வீட்டு வைத்தியத்தில் முதல் மருந்தாக இருப்பது மஞ்சள் தான். உடலில் அடிபட்டு காயங்கள் ஏற்பட்டாலும் சரி, தீக்காயங்கள் உண்டானாலும் சரி, மஞ்சள் தான் எல்லாவற்றிற்கும் மருந்து. ஒரு சிறப்பான கிருமி நாசினியாக மஞ்சள் செயல்படுகின்றது. இந்த மஞ்சளோடு, மிளகும் சேரும்போது நல்ல ஒரு மருந்தாக மாறிவிடுகின்றது. விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூளுடன் மிளகுத்தூளையும் சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம், அவற்றின் மருத்துவ குணமே!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close