இளம் வயதிலேயே நரை முடியா ?

  mayuran   | Last Modified : 26 Feb, 2017 07:44 pm
தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் நரை முடி கருமையாக மாறும். பச்சை வெங்காயத்தை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசவும். இவ்வாறு செய்தால், நாளடைவில் நரைமுடி மறைந்து, ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் முடி கருமையாகும். ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close