உடலின் சர்க்கரை அளவை சீர்படுத்தும் தயிர் !!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனித உடலில் உள்ள உறுப்புகளில் கணையம் மிக முக்கியமான ஒன்று. நம் உடலில் உள்ள சுரப்பிகளில் கணையம் தான் பெரிய சுரப்பி. இரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் செய்யும் இன்சுலினை உருவாக்குவது கணையம் தான். அதுமட்டுமின்றி, நாம் உண்ணும் உணவினை செரிக்க வைப்பதும் கணையத்தின் வேலை தான். இந்த உறுப்பினை நாம் உண்ணும் உணவுகளின் மூலமே, எந்த பாதிப்பும் இன்றி பராமரிக்க முடியும். 1. கணையத்தை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் தயிர் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், தயிருடன் சர்க்கரை சேர்க்கக்கூடாது. 2. சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரெட்ரோல் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் கணைய செல்களை சரியான அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. 3. தக்காளி மற்றும் பசலைக்கீரையில் ஆன்டி - ஆக்சிடண்டுகள் உள்ளதால் கணையப்புற்று நோய் வராமல் பாதுகாக்கின்றது. இவைதவிர, பூண்டு, புரோக்கோலி, முட்டைகோஸ் போன்றவையும் கணையத்தின் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளாக உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close