சிறுநீரக கற்களைக் கரைக்கும் வெங்காயம்..!!!

  jerome   | Last Modified : 01 Mar, 2017 02:05 pm
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம், அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், 1. முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். 2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், விஷத்தையும் முறித்து விடுகிறது. 3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். 4. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 5. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வீட்டிலேயே செய்து கொள்ளும் இந்த எளிய மருத்துவ முறைகளை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close