பருக்களை போக்க சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 02 Mar, 2017 06:52 am
முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயை பயன்படுத்தலாம். க்ரீன் டீயை, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், பாக்டீரியாக்கள் அழிந்து பருக்கள் எளிதில் நீங்கிவிடும். சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். இதன் மூலம் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும். தினமும் படுக்கும் போது, பஞ்சில் எலுமிச்சை சாற்றை நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள கிருமிகள் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close