பால் உணவுகள், வைட்டமின் 'டி' : எலும்பு நோய்களை கட்டுப்படுத்தும்

  gobinath   | Last Modified : 02 Mar, 2017 01:05 pm

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவது வழக்கம். அதிலும், சிலருக்கு, ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் முதுகுத் தண்டு வளையும் நோய் தாக்ககூடும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் குனிந்த நிலையில் நின்றபடிதான் எல்லா வேலைகளையும் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். இவ்வாறு, முதுகுத்தண்டு, இடுப்பு எலும்பு ஆகியவற்றை நாம் தக்க வகையில் பாதுகாத்து கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்குவதை குறைத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பால் உணவுகளுடன் வைட்டமின் 'டி' எடுத்துக் கொண்டால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எலும்பு தேய்மானத்திற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு. பால் உணவுகளோடு நாம் வைட்டமின் 'டி'யை எடுத்துக் கொள்ளும் போது, பால் உணவுகளில் உள்ள கால்சியத்தை வைட்டமின் 'டி' பிரித்து நமது உடம்பில் உள்ள கால்சியம் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, சூரிய வெளிச்சத்திலும் வைட்டமின் 'டி' அதிகளவில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close