சுற்றுச் சூழல் மாசுபாடு : ஆண்டுக்கு 17 லட்சம் குழந்தைகள் மரணம்

  gobinath   | Last Modified : 06 Mar, 2017 05:39 pm
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், சுற்றுச் சூழல் மாசுபாட்டால், உலகம் முழுவதும், ஆண்டுக்கு 17 லட்சம் குழந்தைகள் பலியாவதாக தெரிவித்துள்ளது. அதில், பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதார வசதிகள், மோசமான சுகாதார நடைமுறைகள் மற்றும் உட்புற, வெளிப்புற மாசு, மற்றும் காயங்கள் ஆகியவையும் அடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மாசுபட்ட சூழலானது குழந்தைகளுக்கு மிக ஆபத்தானது, என்கிறார் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் மார்கரெட் சான். மேலும், அவர்களின் வளரும் உறுப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு சுற்றுச் சூழல் மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு அருகில் புகை புகைப்பிடிப்பது நாள்பட்ட சுவாச நோய்களை உண்டாக்கும் என எச்சரித்துள்ள மார்கரெட் சான், 'ஆஸ்துமா' போன்ற நோய்கள் வருவதற்கு, குழந்தைகள் அருகில் புகை பிடிப்பதே காரணம் என தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு மிக அதிகளவில் தாக்கும் வயிற்றுப்போக்கு, மலேரியா மற்றும் நிமோனியா ஆகிய நோய்களே சிறுவர்கள் அதிகளவில் உயிரிழப்பதற்கு காரணமாக அமைவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், நுளம்பு வலைகள், சுத்தமான சமையல் எரிபொருள் மற்றும் சுத்தமான நீர் ஆகியவற்றை பயன்படுத்துமாறு பெற்றோரை கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், குழந்தைகள் வீட்டில் இருந்தால், செல்லப் பிராணிகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் பூசப்படும் பெயிண்ட் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும். சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் ஆகியவையும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close