கோடைகாலம் வர, சேர்ந்தே நோய்களும் வருகிறது. அதிலும் நம் உடலில் வெப்பம் காரணமாக ஆங்காங்கே கட்டிகள் வருகிறது. இதனை நம் வீட்டில் கிடைக்கும் பொருட்கள் கொண்டே சரி செய்துவிடலாம்.
* அரசி மாவையும் மஞ்சள் பொடியையும் விளக்கெண்ணெய் விட்டு வேக வைத்து கட்டிகளின் மீது தடவி வரக் கட்டி பழுத்து உடைந்து, காயமாக மாறிக் குணமாகிவிடும்.
* உடலில் ஏற்படும் நெறிக்கட்டிகளுக்கு வல்லாரை இலையை விளக்கெண்ணெய்யில் தடவி, சூடாக்கி கட்டிகள் மேல் வைக்க நெறிக் கட்டிகள் கரையும்.
* முகத்தில் வரும் சிறு கட்டிகளுக்கு, தூங்கச் செல்லும் முன் மஞ்சள் அல்லது சந்தனம் வைத்துவிட்டாலே எளிதில் கட்டிகள் உடைந்துவிடும்.