வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை காக்க...

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஆனால் ஆண்கள் தங்கள் சருமத்தில் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதனால் சருமம் கருமையாகவும், ஒரு வித எரிச்சலுடனும் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சில இயற்கை பேஸ் பேக்குகளை பயன்படுத்துங்க. எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் அல்லது கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகக்கருமை நாளடைவில் நீங்கும். மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து, வர, சரும செல்கள் நன்கு பாதுகாப்புடனும், சருமம் கருமையாகாமலும் இருக்கும். பப்பாளியை மசித்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close