இந்த அறிகுறிகள் உங்கள் கண்களில் உள்ளதா..? உஷார்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம். கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு அனைத்து பொருட்களும் மங்கலாக தெரிய ஆரம்பிக்கும். கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தாலும், கண்கள் சோர்வடைந்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும். கண்கள் மிகவும் சோர்ந்திருந்தால், கண் இமைகளைத் திறப்பதே கடுமையாக இருக்கும் மற்றும் வெளிச்சத்தை பார்த்தாலே கண்கள் கூச ஆரம்பிக்கும். கண்களில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதாவது சரியாக தூங்காமல் இருந்தால் கண்கள் வலிக்க ஆரம்பிக்கும். அதுவும் கண்களில் வலி ஆரம்பித்து கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியையும் பாதிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close