பளிச்சிடும் தோற்றத்திற்கு இந்தப் பழங்களின் தோல்கள் போதும்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பழங்களில் தோல்கள் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் தவிர்க்க முடியாத சிலவற்றை இப்போது பார்க்கலாம்... * ஆரஞ்சுப் பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும். * வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும், புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். * மாதுளையின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளோ, சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, நிறத்தையும் அதிகரிக்கும். * எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும். * ஆப்பிளின் தோலில் ஏராளமாக உள்ள பாலிஃபீனால்கள், சரும செல்களைப் புதுப்பித்து வயதான தோற்றத்தைத் தடுக்கும். * பப்பாளியின் தோலில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, இறந்த செல்களை வெளியேற்றும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close