சிறுவர் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் டிவி !

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
3 மணி நேரத்துக்கும் அதிகமாக டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் நேரத்தை செலவழிக்கும் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அத்துடன், இவ்வாறான சிறுவர்களுக்கு கொழுப்பின் அளவு அதிகரிக்கும் அதேவேளை, உடலில் உள்ள செல்களால் இன்சுலினுக்கு பதிலளிப்பது கட்டுப்படுத்தப் படுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால், 2ஆம் வகை நீரிழிவு நோய் ஏற்படக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக டிவியில் நேரத்தை செலவழிக்கும் சிறுவர்களை விட, மிக குறைந்த அளவு நேரத்தை டிவி முன் செலவழிக்கும் சிறுவர்களின் உடல் எடை, சதையின் தடிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு ஆகியவை மிகப் பெரியளவில் மாறுபடுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள 4 500 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close