மிகக் குறைந்த நேரமே உறங்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஃபிட்பிட் என்ற உடல்நல ஆலோசனை வழங்கும் நிறுவனம் நடத்திய ஆய்வில், , உலக அளவில் மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த மக்கள், மிகக் குறைவான நேரமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது. அதில், எப்போதும் மிக சுறுசுறுப்பாக இயங்கும் ஜப்பானியர்கள் முதலிடத்தில் இருப்பதாகவும், நாளொன்றுக்கு, சராசரியாக, 6.35 மணிநேரம் மட்டுமே அவர்கள் உறங்குவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது. மேலும், இந்தியர்களிடையே உடல்நலம் பராமரிப்பதில் போதிய அக்கறை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. வேலைப்பளு, உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை தான் இந்தியர்கள் தங்கள் தூக்கத்தை தொலைக்க காரணங்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினரே, உலக அளவில், நீண்ட நேரம் அதாவது, 8 மணிநேரத்திற்கும் மேலாக, சராசரி உறக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, பசி, உறக்கம், உடல் பராமரிப்பு, உணவுப்பழக்கம் உள்ளிட்டவையே ஒரு மனிதனின் வாழ்நாளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close