இழந்த முகப்பொலிவினை மீட்டெடுக்கும் தக்காளி பேஷியல் ஸ்க்ரப்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காததால், பலருக்கு முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடுகிறது. அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்தத் தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள், பின்னர் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் புதுப்பொலிவு பெரும். அதுபோல், கரும் புள்ளியால் பாதிக்கப்பட்ட முகத்தை மீட்டெடுக்க இருக்கவே இருக்கு தக்காளி பேஷியல். உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன், தக்காளி விழுது - அரை டீஸ்பூன். இரண்டையும் நன்றாகக் கலந்து இப்பேஸ்ட்டைக் கழுத்திலும், முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close