பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
* சாம்பல் கரியை அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் உங்கள் பற்கள் வெள்ளையாக, வலுவாக மாறும். * பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை பல் துலக்கினால் பற்களில் உள்ள கறை நீங்கும், உப்புக்களை அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் பற்களின் எனார்மல் பாதிக்கப்படும் எனவே உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். தற்போது சில பேஸ்ட்டுகளில் உப்பு கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. * இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும். * எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்த பின்பு, பற்களை நன்கு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும். * ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவையும் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவும், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல பற்களும் பளிச்சிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close