• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

உங்கள் சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சருமத்துக்கு அதிகக் குளிர்ச்சி தரக்கூடிய கற்றாழையைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். அவற்றில் முக்கியமான வற்றை இப்போது பார்க்கலாம். * சிறிது கற்றாழை ஜெல்லுடன் சற்று எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, முகம் பொலிவு பெரும். * கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவினால், சருமம் இளமையாகத் தோன்றும். * கற்றாழையின் ஓரங்களில் உள்ள முட்களை வெட்டிவிட்டு, நீரில் போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து சிறிது தேன் சேர்த்து அப்ளை செய்தால், மினுமினுக்கும் முகத்தைக் காண்பீர்கள். * சென்சிடிவ் சருமமாக இருந்தால் கற்றாழையுடன் தயிர், வெள்ளரிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும். வறட்சியான சருமமாக இருந்தால் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், பேரீச்சம்பழம், எலுமிச்சை சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close