சம்மரை சமாளிக்க சில டிப்ஸ்...

  jerome   | Last Modified : 27 Mar, 2017 07:40 pm
கோடை வெப்பத்திலிருந்து உடலை பாதுகாக்க குளிக்கும் தண்ணீ­ரில் புதினா, வெள்ளரி விதைகள், எலுமிச்சை சாறு இவற்றை தனித்தனியாக கலந்து குளித்தால் நறுமணத்தோடு புத்துணர்ச்சியும் கிடைக்கும். அடிக்கடி வியர்வை வழியும்போது உடனடியாக டிஷ்யு பேப்பரால் ஒற்றி எடுக்கவும். இதனால் தூசி, அழுக்கு, வியர்வை போன்றவை சுத்தப்படுத்தப் படுவதால் முகப்பருக்களில் இருந்து முகத்தை பாதுகாக்கலாம். டூவீலரில் போகும் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும். காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடை வெம்மையை கடுமையாக்கும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதனால் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்க முடியும். காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளை தவிர்த்து பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர் என எடுத்துக்கொள்வது நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close