முகத்தை ஜொலிக்க வைக்கும் தேங்காய் ஃபேஷியல்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காயை வைத்து நமது தேகத்தை எப்படி அழகாக வைத்துக்கொள்ள முடியும் என அழகுக்கலை நிபுணர்கள் கொடுக்கும் எளிய டிப்ஸ் கீழே.... * வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிது இளநீர் கலந்து முகத்தில் பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்தால் மாசு மருவின்றி முகம் மிளிருமாம். இதை தினமும் செய்தால், கரும் புள்ளிகள் இருந்தால் கூட கூடிய விரைவில் காணாமல் போய்விடுமாம். * வெயில் காலங்களில் சூரியஒளியால் முகம் கறுமை அடையும். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கறுமையை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close