இளநரையை போக்க எளிய வழிகள்...

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சரியான தூக்கமின்மை, உடல் சூடு, மன அழுத்தம், மரபணு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றால் இளநரை தோன்றி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து விடுபட வீட்டிலேயே எளிய முறைகளை பின்பற்றி சரி செய்து விட முடியுமென்றும் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச சில வாரங்களிலேயே நரைமுடி மறைய ஆரம்பிக்குமாம். நெல்லிக்காயை சிறிது சிறிதாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, உச்சந்தலை குளிரும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம். கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பசையாக்கி தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close