இதெல்லாம் செய்தால் தூக்கம் நல்லா வருமாம்...!!!

  jerome   | Last Modified : 28 Mar, 2017 11:26 pm
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. நாள் முழுவதும் நம்முடன் சேர்ந்து வேலை பார்க்கும் நம் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஓய்வு கிடைப்பதே இந்த தூக்கத்தின் போது தான்.ஆனால், முறையான நேர மேலாண்மை இன்மை, முறையற்ற இரவு சாப்பாடு, உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது, அலுவலக வேலைப்பளு போன்ற காரணத்தால் பலருக்கு இரவுத்தூக்கம் என்பதே குறைந்து விட்டது. ஆனால், இரவு தூக்கம் மிகவும் முக்கியம். பணியில் இருப்பவர்களுக்கும் பகலில் தூங்குபவர்களுக்கும் இரவில் தூக்கம் வராது. பெரும்பாலும் பகல் தூக்கத்தை தவிர்த்தாலே இரவில் நன்றாக தூங்கலாம். நல்ல தூக்கத்திற்கு நல்ல சுகாதாரமான படுக்கை அறை தேவை. குறிப்பாக படுக்கை விரிப்புகள், மிதமான தடிமனில் பருத்தி தலையணை ஆகியவை இருந்தால் தூக்கமும் நன்றாக வரும், தூக்கம் இடையில் கலையாமலும் இருக்கும். இரவு உணவு அதிகமாக சாப்பிடக் கூடாது. அரை வயிற்றுக்கு, அதே நேரம் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக தூங்குவதற்கு முன்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும். தூங்குவதற்கு முன்னர் மிக முக்கியமாக அனைவரும் செய்யும் தவறு டிவி, கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதுதான். இதிலிருந்து வெளிப்படும் நீலவண்ண ஒளி தூக்கத்தை பாதிக்கும். எனவே தூங்குவதற்கு அரை மணிக்கு முன்னர் இவற்றை பார்ப்பதை தவிர்ப்பது நலம். தூங்கும்போது கழுத்தை சரியான கோணத்தில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டியது அவசியம். படுத்துக் கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். படுக்கை அறையில் எந்த காரணத்தை கொண்டும் டிவியை வைக்க வேண்டாம். இது போன்ற சிறு சிறு விஷயங்களை சரியாக செய்து, நிம்மதியான தூக்கத்தை பெற்றால், உடல் நலம் மட்டுமல்லாமல் மனதளவிலும் தினம் தினம் புத்துணர்ச்சி கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close