பயணத்தின் போது வரும் குமட்டலை தடுக்க வேண்டுமா..???

  jerome   | Last Modified : 01 Apr, 2017 02:14 am
கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணிக்கும்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி போன்ற உணர்வை 'மோஷன் சிக்னஸ்' என்று குறிப்பிடுகின்றனர். வாகன நகர்வின் போது ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உணர்வு உறுப்புகள் ஏற்றுக்கொள்ள இயலாமல் இவ்வாறான உடல் உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தவிர்க்க சில எளிய வழிமுறைகள்... பயணத்தின் போது அருகிலுள்ள பொருட்களை பார்ப்பதைத் தவிர்த்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, பயணத்தின்போது சிறிய பொருட்களை உன்னிப்பாகப் பார்ப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, புத்தகம் படிப்பதும் இந்தப் பிரச்சனையை உண்டு பண்ணும். பயணத்திற்கு முன் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றுக்கு சாப்பிடுவதும் இந்த குமட்டல் உணர்விலிருந்து விடுபட உதவும். கார உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், சாப்பிடாமல் இருந்தாலும் வெறும் வயிற்றில் இந்த உணர்வு வரும். அத்துடன், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம். உடலில், நீர்சத்துக் குறைந்தாலும் பிரச்சனை ஏற்படும். எனவே, அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியம். அமைதியாகப் பயணம் செய்யாமல், உடன் வரும் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே செல்வதன் மூலமாக இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். கார் என்றால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு, ஓட்டுபவருடன் பேசிக்கொண்டு செல்லலாம். பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் சிறிய இஞ்சி துண்டை மென்று தின்றால் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அதேபோன்று, எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு நுகர்ந்தாலும் பலன் தரும். குமட்டல் உணர்வு உள்ளவர்கள் கையில் பாலித்தீன் கவர்களை எடுத்துச்செல்வதும் அவசியம். கட்டுப்படுத்த முடியாமல் வாந்தி வந்தால் அருகில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்கும். சம்மர் ஸ்டார்ட் ஆயிடுச்சு... ஸோ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி உங்க ஹாலிடேஸ் டிராவலை என்ஜாய் பண்ணுங்க..

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close