உடற்ச்சோர்வினால் மாதவிடாய் காலங்களில் பொலிவிழந்தும் காணப்படும் பெண்கள், அச்சமயத்தில் அதிகமாக நீர் அருந்த வேண்டும். தானியவகை உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. வைட்டமின்களை மாத்திரைகள் மூலம் எடுப்பதை விட, பழங்கள் மூலம் எடுத்துக் கொள்வது இன்னும் ஆரோக்கியத்திச் சிறப்பாக்கும். திராட்சை மற்றும் எலுமிச்சையில் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. உடலில் இழக்கப்படும் கொழுப்பமிலங்களை, ஆளி விதை, பரங்கிக்காய் மற்றும் சூரியகாந்தி விதை ஆகியவற்றை உணவுடன் எடுத்துக்கொள்வதால் ஈடுகட்டலாம்.