நீங்கள் அடிக்கடி நகம் கடிப்பவரா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம்மில் பலர் கோபம், வருத்தம், அழுகை, ஆழ்ந்த சிந்தனை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இதனால், ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் எழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்துவிடும். பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுமையாக மூட முடியாத நிலை கூட ஏற்படும். நகம், பாக்டீரியா வளரும் இடம். சால்மனெல்லா, இ.கோலி., பாக்டீரியாக்கள் நகம் மற்றும் விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது, அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, எளிதில் நோய் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close