சிறுநீர் நிறத்தின் அறிகுறிகள்..

  jerome   | Last Modified : 03 Apr, 2017 06:21 pm

நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறினாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், நம் சிறுநீரின் நிறத்தை பொறுத்தும் நம் தேக ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியுமாம். அதன்படி, சிறுநீர் வெண்மையாக வெளியேறினால், நம் உடலில் இருந்து அதிகப்படியான உப்பு சத்து வெளியேறுகின்றது என்று அர்த்தமாம். இதனால், உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருக்குமாம். சிறுநீர் வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தால், நம் உடலில் கழிவுகள் வெளியற்றப்பட்டு ஆரோக்கியமாக உள்ளது என தெரிந்து கொள்ளலாம். வேறு ஏதேனும் நிறத்திலும், நுரையுடனும் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close