இன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகின்றது என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே ஒரு சில அறிகுறிகள் வெளிக்காட்டும். அதைக் கூர்ந்து கவனித்தால், நிச்சயம் மாரடைப்பினால் இறப்பதைத் தடுக்கலாம்.
மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மை, மூச்சுவிடுவதில் சிரமம், பலவீனமான தசை, மயக்கம், குமட்டல், வியர்வை, மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு, வலது அல்லது இடது தோள் பட்டையில் வலி, செரிமானம் ஆகாமல் இருத்தல், மேல் இடுப்பில் வலி போன்ற பிரச்சினைகளை 1 வாரத்திற்கும் மேலாக நீங்கள் அனுபவித்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இதுதவிர 25% மாரடைப்பினால் நிகழும் மரணங்களுக்கு எந்த வித முன் அறிகுறிகளும் தோன்றுவது இல்லையாம்.