பழத் தோலில் இவ்ளோ விஷயம் இருக்கா...!!!

  jerome   | Last Modified : 06 Apr, 2017 10:25 pm
அதிக மருத்துவ குணம் நிறைந்த, அதே சமயம் எக்காலத்திலும் விலை குறைவாக கிடைக்கூடிய வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகமாகவே அடங்கியுள்ளது. பழத்தைப் போலவே இதன் தோலினாலும் அதிக நன்மைகள் இருக்கின்றது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்லத் தடவி, பின் அந்த இடத்தைச் சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு வகை என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும். தினமும் பல் துலக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு பற்களை தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் கறை நீங்கி வெண்ணிறமடையும். ஆகவே, தோலை குப்பையில் வீசுவதற்கு பதிலாக இப்படியும் பயன்படுத்துங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close