சமையலுக்கு எந்த எண்ணெய் சரியானது...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பொதுவாகவே எண்ணெயில் உள்ள கொழுப்பு, அமிலத்தன்மை கொண்டது. அதனால் அதை கொழுப்பு அமிலம் (Fatty Acid) என்று அழைக்கிறோம். கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகை உள்ளது. 1. செறிவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids-SFA) 2. செறிவுறா கொழுப்பு அமிலம் (Unsaturated Fatty Acids-UFA) இவற்றில் SFA ரத்தக் கொலஸ்ட்ரால் அளவை நேரடியாகவே அதிகரிக்கும். பாமாயில், வனஸ்பதி, நெய், வெண்ணெய் போன்றவற்றில் இந்த அமிலம் அதிகம். செறிவுறா கொழுப்பு அமிலம் இரண்டு வகைப்படும். 1. ஒற்றைச் செறிவுறா கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acids-MUFA) இது ரத்தக் கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பைத் தடுப்பது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பருத்தி எண்ணெய் ஆகியவற்றில் இது இருக்கிறது. 2. பல் செறிவுறா கொழுப்பு அமிலம் (Poly Unsaturated Fatty Acids-PUFA) இது ரத்தத்தில் தேவையின்றி சுற்றிக் கொண்டிருக்கும் கொழுப்பை கல்லீரலுக்கு எடுத்துச் சென்றுவிடும். இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. இது சோயா எண்ணெயில் அதிகம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தலின்படி ஒரு நல்ல சமையல் எண்ணெயில் SFA, MUFA, PUFA ஆகிய மூன்றும் 1 : 1 : 1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், எந்த எண்ணெயையும் 'நல்ல சமையல் எண்ணெய்' என்று கூற முடியாது. இருந்தாலும் இருக்கிற எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்தலாம். ஒரு நடுத்தர வயது நபருக்கு நாளொன்றுக்கு 15 மி.லி. சமையல் எண்ணெய் போதும். இதற்கு மேல் எண்ணெய் செலவானால் கொலஸ்ட்ரால் ஆபத்தை நீங்களே விலைக்கு வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close