கருப்பை பாதிப்பை குறைக்கும் நாவல் பழங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோடை காலங்களில் மட்டுமே சில பழங்களும், காய்களும் கிடைக்கும். அதில் குறிப்பிடதக்க ஒன்று நாவல் பழம். இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கின்றது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில் தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய மூன்றும் ஒன்றாக உள்ள அரிதான பழம் இது மட்டுமே. நீரிழிவு நோய், மூலநோய், கருப்பை பாதிப்பு, சரும நோய், மாரடைப்பு, சிறுநீரக பிரச்சனை, வயிற்றுபோக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதில் நாவல் பழத்திற்கு சக்தி இருக்கின்றது. அதேசமயம், நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. மேலும், இதனை சாப்பிட்ட உடனே பால் குடிக்கக் கூடாது. முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும். இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நாவல் பழத்தின் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. ஒரு படி 20 ரூபாய்க்கு விற்பனையான நாவல்பழம் தற்போது ஒரு படி 80 ரூபாயில் இருந்து ரூ.100 வரைக்கும் விற்பனை ஆகின்றது. நாட்டு நாவல்பழத்தின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஆந்திராவிலிருந்து நாவல்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close