உருளைக் கிழங்கில் இவ்வளவு ஆபத்துகளா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த உருளைக்கிழங்கில் பசும்பாலுக்கு நிகரான சக்திகள் இருக்கின்றன. இருப்பினும் பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கு மற்றும் முளை விட்ட கிழங்கில் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் இயற்கையாகவே காணப்படுகின்றதாம். இதை உண்பதால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட கூட வாய்ப்புகள் உள்ளதாம். முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகிய நச்சுப் பொருட்கள் விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படுபவை. இவைகளை சாப்பிடும்போது குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. நச்சுப்பொருட்கள் உள்ள முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close