• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

கோடை கால வயிற்றுப்போக்கினை தடுப்பது எப்படி..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வெயில் காலத்தில் உண்டாகிற கடுமையான வெப்பத்தின் காரணமாக சரும நோய்கள் மட்டுமன்றி வயிற்றிலும் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் "கோடை கால வயிற்றுப்போக்கு" (Summer Diarrhoea) முக்கியமானது. இதற்கு குடலில் செரிமானத்திற்கு உதவுகின்ற என்சைம்கள் வெப்ப காலத்தில் குறைவாக சுரப்பதே காரணம். மேலும், வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவதும் அதிகரிக்கிறது. நாம் பயன்படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து தப்பிக்க எளிய வழிமுறைகளை மேற்கொண்டாலே போதுமானது. நாம் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைந்தது 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டிலும் சமையலறையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களில் சுகாதாரமான முறையில் உணவைச் சமைக்க வேண்டும். நன்கு வேகவைத்த உணவை உண்ண வேண்டும். கோடையில் சமைத்த உணவு வகைகள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், சுடச்சுட சாப்பிட்டுவிட வேண்டும். நாள் கணக்கில் சேமித்துவைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாலையோரக் கடைகளிலும், திறந்தவெளி உணவகங்களிலும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close