கல்லீரலை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று உலக அளவில் நிகழும் மரணங்களில் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மரணங்கள் மூன்றாவது இடத்தில் உள்ளன என்றும் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதயம், மூளை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பாதுகாப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை. நாம் சாப்பிடும் உணவினை செரிமானம் செய்ய உதவுவது, உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலை சேமித்து வைப்பது, உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற உதவுவது என கல்லீரல் செய்யும் பணி மகத்தானது. எந்த ஒரு உடல் உறுப்பிலும் ஒரு பாதிப்பு என்றால், உடனே அது வெளிப்பட்டுவிடும். ஆனால், கல்லீரல் அப்படி கிடையாது. கல்லீரல் பாதிக்கப்படும் தன்மையைப் பொறுத்து அறிகுறிகள் உடனடியாகத் தெரியலாம் அல்லது பல நாட்கள் கழித்தும் தெரிவது உண்டு. கல்லீரல் பாதிக்கப்படும் நிலையை ஹெபடைட்டிஸ் என அழைக்கிறார்கள். இதற்கு ஹெபடைட்டிஸ் வைரஸ்களே காரணம். கல்லீரலில் கொழுப்பு சேருதல், 'சிரோசிஸ்' எனும் கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் புற்றுநோய் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. இவற்றில் 'சிரோசிஸ்' எனும் நோய்தான் கல்லீரல் நோய்களின் மோசமான நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவதுதான். மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். சீரான உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, விந்து ஆகியவற்றைத் தானமாக அளிக்க கூடாது. கல்லீரலை பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஹெபடைட்டிஸ் கிருமி தொற்று உள்ளவர்களுடன் பாலுறவு கொள்ளக் கூடாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close