மன அழுத்தத்தை சீர் செய்யும் வைட்டமின் 'டி'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று உலகளாவிய அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்வதற்கு உளவியல் சிகிச்சை முறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் உண்ணும் உணவின் மூலமும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் வெகுவாக குறைகின்றதாம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கு, வைட்டமின் டி மிகவும் அடிப்படையானது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த உயிர்வேதியியல் செயல்பாட்டிற்கும், மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களுக்கும் நிறையவே தொடர்பு இருக்கின்றதாம். மீன் எண்ணெய், முட்டை, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் உணவினில் இவற்றை சீரான இடைவெளியில் சேர்த்துக்கொள்ளுமாறும், சூரிய ஒளியில் போதுமான அளவு இந்த வைட்டமின் கிடைப்பதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது 20-25 நிமிடம் வெட்டவெளியில் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close