கொட்டாவி ஒரு அறிகுறியா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி. அலுப்பான சூழலில் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கின்றது. ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளுவது தான் கொட்டாவியின் செயல். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள இதய நோயாளி, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால், அதை எச்சரிக்கை சிக்னலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். மூளைக்கு செல்கிற ஆக்சிஜன் குறைந்துள்ளது என்பதை இது உணர்த்தும். இந்த நோயாளிகளை தனி கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அடிக்கடி கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு மற்றும் தூக்கம் தேவை. ஒரு மணி நேரம் சிறிய தூக்கம் (Small nap) தூங்குவது நல்லது. சலிப்பான, பிடிக்காத சூழலிருந்து விலகிவிட்டாலே, கொட்டாவி வருவது நின்றுவிடும். தவிர்க்க முடியாத சூழலாக இருப்பின் முகத்தை நன்றாக கழுவி புத்துணர்வு பெறலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close