கோடையை சமாளிக்க சில டிப்ஸ்...

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
* தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். உப்புக் கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லெஸ்ஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். * எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து கொள்ள வேண்டும். * வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். * வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். * மது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால், இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளது குறிப்பிட தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close