மூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் நரம்பு செல்களின் அழிவுக்கு காரணமாகின்றது. மிக அதிகமாக சாப்பிடுவதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகி மூளையில் சக்தி குறைவை ஏற்படுத்துகின்றது. புகை பிடித்தல், மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய சர்க்கரை சாப்பிடுவதால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பை உண்டாக்குகின்றது. மாசு நிறைந்த காற்றை சுவாசித்தால் நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு தடை செய்கின்றது. இதனால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறைகின்றது. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது நரம்பு செல்களின் இணைப்புகள் உருவாகி மூளையை வலிமையான உறுப்பாக மாறும். மேலும், அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூலமும் மூளையின் வலிமையை அதிகரிக்கலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.