• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

இரவில் தூக்கம் வரவில்லையா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நல்ல தூக்கமானது ஞாபகம், கவனம், சிந்தனைத் திறன் போன்றவற்றை அதிகரிக்க உதவும். ஒருவர் தடையின்றி தினசரி 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தூக்கமின்மை ஏற்பட்டால் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் உருவாக வழிவகுக்கும். இதயநோய், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, நீரிழிவு நோய், தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்டவை தூக்கமின்மைக்கு காரணங்கள். மன அமைதியின்மையும், சந்தேக நோய்களும் தூக்கம் கெடுவதற்கு காரணமாக அமையலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதலும் தூக்கத்தை கெடுக்கும். தூங்குவதற்கு முறையாக நேரம் ஒதுக்காத நிலை, இரவில் அடிக்கடி வேலை செய்தல், மன அழுத்தம், பகலில் தூங்கும் தன்மை போன்றவையும் தூக்கக் குறைவை ஏற்படுத்தும். அதிகமாக சேட்டையில் ஈடுபடுகின்ற குழந்தைகளுக்கு இரவில் தூக்கக் குறைவு காணப்படும். இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளது. எல்லா நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். விளக்குகளை எரியவிட்டு தூங்க கூடாது. படுக்கையில் இருந்தவாறே புத்தகம் படித்தல், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவு குறைவாக இருக்க வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தூக்கமின்மை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close