முதுமையை தள்ளி வைக்கும் பலாப்பழம்

  jerome   | Last Modified : 18 Apr, 2017 10:02 pm

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது. நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானத்திற்கு உதவி புரிகின்றது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. அதாவது, வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் காக்கின்றது. பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close