குடலுக்கு வலு சேர்க்கும் ரசம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசத்தில் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வதால் வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாயு, ருசியின்மை, பித்தம் போன்ற பிரச்சனைகளையும் சரியாக்கும் வல்லமை உடையது. கொத்தமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. வயிற்றுக்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது. உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100% பொருந்தும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close