எடையைக் குறைத்து அழகாக தோற்றமளிக்க 'தயிர்' சாப்பிடுங்க...

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கின்றது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோஃப்லாவின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், உடல் பருமனான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22% அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாகவும் தோற்றமளித்து உள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close