மூளை பிரச்சனைகளை தீர்க்கும் டார்க் சாக்லேட்

  shriram   | Last Modified : 23 Apr, 2017 09:57 pm

வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும், வீக்கமும் தான் அல்சைமர் போன்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில், எபிகேடசின் என்ற பொருள் டார்க் சாக்லேட்டில் உள்ளதாகவும், அது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இதனால், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close