பிரசவத்திற்கு பிறகு ‘ஸ்லிம்’ ஆகணுமா ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் உடல் எடை அதிகரிப்பு முக்கியமானது. அதிலும் ஒருசில பெண்களுக்கு வழக்கத்தை விட உடல் எடை கிடுகிடுவென உயர்ந்து விடும். அத்தகைய பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது, சரி செய்வது என்பதனை பார்ப்போம்.... * கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். * கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன. * தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும். * பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். * புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும். * எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும். * உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.