சர்க்கரை நோயாளிகளுக்கான 'சீனி துளசி'

Last Modified : 27 Apr, 2017 12:49 pm

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டி என இயற்கையாக கிடைக்கும் சுவையூட்டிகளை பயன்படுத்தினாலும் வெள்ளை சர்க்கரை ருசிக்கு அடிமையான நமக்கு இவற்றின் சுவை பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வாக வந்துள்ளது சீனி துளசி. `ஸ்டீவியா ரிபாடியானா' (Stevia Rebaudiana) என அழைக்கப்படும் இந்த சீனி துளசியில் இருக்கும் Stevioside மற்றும் Rebaudioside எனும் இரு இயற்கை வேதிப்பொருட்கள் தான் இதன் இனிப்பு சுவைக்கு காரணமாகும். வெள்ளை சர்க்கரையை விட 30 மடங்கு அதிக இனிப்பு தன்மை கொண்ட இதில் குறைந்த அளவே சர்க்கரை மற்றும் மாவு சத்து உள்ளது. அதனால் இதனை சர்க்கரை நோயாளிகள் கூட உண்ணலாம். சீனி துளசியின் இலையை காயவைத்து பொடி செய்து டீ முதல் ஐஸ்கிரீம் வரை அனைத்திலும் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம். ரத்த கொதிப்பு, சரும பிரச்சனைகள், செரிமான கோளாறு போன்றவற்றுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது. தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் இந்த செடி தற்போது வடஇந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close