ஸ்ட்ரெச் மார்க் மறைய சில டிப்ஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தாய்மார்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் தலையாய பிரச்சனை வயிற்றில் இருக்கும் தழும்புகள் தான். இந்த தழும்புகள் மறைய உங்களுக்காக சில டிப்ஸ்... **கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். **சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும். **சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும். **கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள வேதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது. **லாவெண்டர் ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருளாக உள்ளது. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும். **அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close