கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும். * வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். * குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது. * கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். இதைப் போக்க தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தைப் பறித்து அதனுடன் துளசி இலைகள் மூன்றைச் சேர்த்து மென்று காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். * பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.